பொங்கல் பண்டிகை-பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குள் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவடி மாநகர போலீஸ் எல்லையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட தமிழக அரசு சார்பில் கிளாம்பாக்கம், தாம்பரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.பூந்தமல்லியில் இருந்து கர்நாடகா, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில்,பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்த வண்ணம் உள்ளனர்.
இன்றைய தினத்தில் காலையிலிருந்து கூட்டம் சற்று குறைந்த நிலையில் இரவும், நாளையும் அதிக பயணிகள் வரக்கூடும் என்பதற்காக பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் சிறப்பு பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பூந்தமல்லி சிறப்பு பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் பொது மக்களுக்கு போலீசார் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு கருதி வெடி குண்டு சோதனை செய்யும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையம் முழுவதும் பேருந்துகளிலும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை உள்ளனர். அப்போது அங்கு பொங்கலுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டிருந்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “ பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ளோம்.பொங்கல் பண்டிகையை ஒட்டி நான்கு நாட்களுக்கு ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குள் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்”என தெரிவித்தார்.
What's Your Reaction?