இன்று பௌர்ணமி தை பூசம்.. களைகட்டிய முருகன் கோயில்கள் !

இன்று பௌர்ணமி தை பூசம் என்பதால் முருகன் கோயிகளில் பக்தர்கள் கூட்டம் காலை முதல் இருந்தே அலைமோதுகிறது. மேலும் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Jan 25, 2024 - 09:09
Jan 25, 2024 - 12:45
இன்று பௌர்ணமி தை பூசம்.. களைகட்டிய முருகன் கோயில்கள் !

இன்று பௌர்ணமி தை பூசம் என்பதால் முருகன் கோயிகளில் பக்தர்கள் கூட்டம் காலை முதல் இருந்தே  அலைமோதுகிறது. மேலும் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தை பூசம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தை பூசம் அன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுவதால் அன்று பெரும்பாலும் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் தைப்பூசத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு அதிகளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து பழனியில் பொதுவாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். பழனியில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அதனால், பழனிக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இதற்காக பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே ஜனவரி 25 முதல் ஜனவரி 28 வரை  முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  கோயம்புத்தூர் - திண்டுக்கல் தைப்பூச சிறப்பு ரயில் (06077) கோயம்புத்தூரிலிருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும் என்றும் மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் தைப்பூச சிறப்பு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும் எனவும் இந்த சிறப்பு ரயில்கள் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow