சிதம்பரம் அருகே உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Jan 18, 2024 - 15:04
Jan 18, 2024 - 15:07
சிதம்பரம் அருகே உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே திருவக்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன்(28).இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.உடலை கைப்பற்றிய அண்ணாமலை நகர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

இறந்த அருண்பாண்டியன் திருமணம் ஆனவர்.இவருக்கு 1 வயது பெண் குழந்தையும் உள்ளது.முதல் கட்ட விசாரணையில் போதையில் இச்சம்பவம் நடந்துள்ளது.சம்பவம்  நடந்த இடத்தில் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow