புதிய இணையதள சேவை தொடக்கம்... சிஏஏ சட்டத்தின் கீழ் இங்க தான் விண்ணப்பிக்கணும்!
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கான புதிய இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தொடங்கியது. விரைவில் செயலியும் அறிமுகம்
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கான புதிய இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தொடங்கியது. விரைவில் செயலியும் அறிமுகம்
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் திங்கட்கிழமை(11.03.2024) முதல் அமலுக்கு வந்தது. இதற்கான ஆணையையும் மத்திய அரசு அரசிதழில் திங்கட் கிழமை வெளியிட்டது.
இந்நிலையில், குடியுரிமை கோரி விண்ணபிக்க புதிய இணைய தளத்தின் சேவையை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியது. விரைவில் மொபைல் சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
What's Your Reaction?