வரி நிலுவை.. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

ரூ.3,567 வரி நிலுவை தொடர்பாக மக்களவைத் தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

Apr 1, 2024 - 13:18
வரி நிலுவை.. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரசின் வங்கிப் பரிவர்த்தனைகள் முன்னதாக முற்றிலும் முடக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ரூ.3,567 வரி நிலுவை வைத்துள்ளதாகக் கூறி, காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 

வரி பயங்கரவாத நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஏற்கனவே CBI அறிவுறுத்தலின்பேரில் ரூ.135 கோடி வரி நிலுவை செலுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி நாகரத்னா அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.  அப்போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. 

CBI அறிவுறுத்தல்பேரில், ரூ.135 கோடி பெறப்பட்டதாகவும், ரூ.1,700 கோடி நிலுவை அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட்டதாகவும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். வரிநிலுவை தொடர்பாக மக்களவைத் தேர்தல் முடியும்வரை காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு  விசாரணை ஜூலை 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow