Prajwal Revenna : 8,000 பென்டிரைவ் - 3,000 வீடியோக்கள்.. தேவகவுடா குடும்பத்தின் பாலியல் லீலைகள்!
3000-க்கும் அதிகமான வீடியோக்கள் வெளியாகி மாநில அரசியல் களத்தில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடகாவின் எம்பியுமான பிராஜ்வல் ரேவன்னா மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், 3000க்கும் அதிகமான வீடியோக்கள் வெளியாகி மாநில அரசியல் களத்தில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தேவகவுடாவின் மகனும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஹெச்.டி தேவகௌடா, தற்போது ஜனதா தளத்தின் தலைவராக உள்ளார். அவரது பேரனும், கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஹெச்.டி ரேவண்ணாவின் மகனுமான பிராஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
தற்போது நடந்துவரும் மக்களவைத் தேர்தலில், அதே ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பிராஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு, அவர் ஜெர்மனிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரங்களிலேயே அவர் மீது பாலியல் புகார் ஒன்று சுமத்தப்பட்டது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் பிராஜ்வல் ரேவண்ணா, பலமுறை பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று அதிரவைக்கும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். மேலும், தன் மகளிடமும் வீடியோகால் மூலம் தகாத முறைகளில் பேசி, பிராஜ்வல் சித்தரவதை செய்துள்ளார் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு அதிரடித்தார். இதுபோல் பல பெண்களுடன் பிராஜ்வல் அந்தரங்கமாக இருந்த 8 ஆயிரம் பென்டிரைவர்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், பரபரப்பானது. தன்னை விட்டு விடுமாறு கதறிய 68 வயது மூதாட்டியிடமும் பாரபட்சமின்றி அவர் அத்துமீறிய வீடியோக்களும் வெளியானது.
இந்த வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவித்த பிராஜ்வல் ரேவண்ணா, அவற்றுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், புகாரளித்த பெண்ணோ, பிராஜ்வல்லோடு சேர்ந்து அவரது தந்தையான ஹெச். டி. ரேவண்ணாவும் தன்னிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டுள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.
இந்த பாலியல் புகார், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பிராஜ்வல் ரேவண்ணாவின் உறவினருமான குமாராசாமியும், முறையான விசாரணைக்குப் பிறகே கருத்து கூற முடியும் என்று கூறி நழுவியுள்ளார். ஒரு கட்சியாக எங்களுக்கும், பிராஜ்வல் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட்டணியில் உள்ள பாஜகவும் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?