GOAT Prashanth: Wow! மாஸ் காட்டும் டாப் ஸ்டார் பிரசாந்த்… வெளியானது கோட் ஸ்பெஷல் போஸ்டர்
கோலிவுட் டாப் ஸ்டார் பிரசாந்த் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரசாந்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: 1990களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் டாப் ஸ்டார் பிரசாந்த். சாக்லெட் பாய், ஆணழகன், செம்பருத்தி நாயகன் என இன்னும் பல பெயர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். விஜய், அஜித் வருகைக்குப் பின்னர் ஃபீல்ட் அவுட் ஆன பிரசாந்த், ஜீன்ஸ் படத்தில் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், சாக்லெட், பிரியாத வரம் வேண்டும் உட்பட ஒருசில ஹிட் படங்களில் நடித்தார். ஆனாலும் பிரசாந்தின் கேரியர் மீண்டும் ஆட்டம் கண்டது.
இறுதியாக பிரசாந்த் நடித்திருந்த அந்தகன் திரைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் விஜய்யின் கோட் படத்தில் கமிட்டானார் பிரசாந்த். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விஜய், பிரசாந்த் மட்டுமின்றி மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
கோட் படத்தில் பிரசாந்தின் கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான கோட் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் மாஸ் காட்டியிருந்தனர். இதன் மூலம் இப்படத்தில் விஜய்யும் பிரசாந்தும் ஒரே கேங் எனத் தெரிகிறது. இந்நிலையில், பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபுதேவா பிறந்தநாளுக்கு வெளியானதை போல, பிரசாந்துக்கும் அதே ஸ்டைலில் இந்த போஸ்டர் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்தின் கோட் போஸ்டரை ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போஸ்டர் மட்டும் போதாது, விரைவில் இன்னும் சில தரமான அப்டேட்ஸ் வேண்டும் என வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
What's Your Reaction?