”என்னை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை..” - ஜெகன் மோகன் ரெட்டி பரபர குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். 

Sep 27, 2024 - 17:54
”என்னை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை..” - ஜெகன் மோகன் ரெட்டி பரபர குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பதி லட்டு விவகாரத்தில், இந்தியாவில் உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் அடையாளமான திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது நடந்ததாக, தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதாவது, “2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் புனிதமான திருமலை ஏழுமலையான் கோயிலில், ஜெகன் நிர்வாகம் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன், ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன்” என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
 
அவரது குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்திருந்தது. மேலும், திருமலையின் புனிதத்தையும் பல கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சந்திரபாபு நாயுடு கொச்சைப்படுத்தி பேசியுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வின் முடிவில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என லட்டு செய்ய பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கொடுத்த நெய் என்பது உண்மையிலேயே திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தும் நெய் தானா? அல்லது அரசியல் செய்வதற்காக ஏதோ ஒரு நெய்யை கொடுத்து அது திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் நெய் என்று தெலுங்கு தேசம் கட்சியே கூறுகிறதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். 

விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, லட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொய் கூறி அரசியல் செய்து வருவதாக விமர்சித்தார். 2014 முதல் 2019ம் ஆண்டு வரை மோசமான தரத்தால் 15 முறை சந்திரபாபு நாயுடு அரசு நெய்யை திருப்பி அனுப்பிய நிலையில், 2019 முதல் 2024ம் ஆண்டு வரை 18 முறை தனது அரசு திருப்பி அனுப்பியதாக அவர் கூறினார்.


ஆந்திராவில் சாத்தான் ஆட்சி நடைபெறுவதாகவும், தனது கோயில் பயணத்தைத் தடுக்க சந்திரபாபு நாயுடு அரசு சதி செய்வதாகவும் அவர் புகார் தெரிவித்தார். மறுபுறம் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பாஜகவினரை காக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow