100 மாவட்டங்களாக பிரித்து உறுப்பினர் சேர்க்கை.. விஜய் கட்சியின் ஸ்கெட்ச்! பொறுப்பாளர் நியமனம் எப்போது?

Feb 22, 2024 - 11:21
Feb 22, 2024 - 12:06
100 மாவட்டங்களாக பிரித்து உறுப்பினர் சேர்க்கை.. விஜய் கட்சியின் ஸ்கெட்ச்! பொறுப்பாளர் நியமனம் எப்போது?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளது. 

அரசியலில் அதிரடியாகக் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமது தமிழக வெற்றிக் கழக கட்சிகளுக்கான பணியை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறார். அண்மையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், கட்சியில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

உறுப்பினர் சேர்க்கைகாக புதிய செயலி ஒன்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணி விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதில், 234 தொகுதிகளையும் 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு பிறகே உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி மற்றும் அதன் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, அதோடு புதிதாக நியமிக்கப்பட உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற  தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

https://kumudam.com/Atrocity-by-boat-engine-tearing-the-net---Rs.-30-lakh-loss...-Tamil-Nadu-fishermen-are-chased-away...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow