தேர்தல் வாக்குறுதிகளாக என்னென்ன இடம்பெற வேண்டும்... மக்கள் முன் மனு பெட்டி வைத்த பாஜக...

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன இருக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்க மனு பெட்டியை புதுக்கோட்டையில் வைத்து மக்களிடம் பாஜகவினர் கருத்து கேட்டார்கள்.

Mar 9, 2024 - 17:27

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பது, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் வாக்குறுதியாக என்னென்ன பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்பு மனு பெட்டியை வைத்துள்ளது. மக்களிடம் பெறப்படும் மனுக்களை டெல்லிக்கு அனுப்புமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 

மனுக்களைப் பெறுவதற்காக, புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் வந்திருந்தார்கள். பொதுமக்கள் வரிசையாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை, பிரச்னைகளை எழுதி மனு பெட்டியில் போட்டுச் சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow