அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : பொங்கல் போனசுக்கு  ரூ 183 கோடி ஓதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ 183 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : பொங்கல் போனசுக்கு  ரூ 183 கோடி ஓதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 
Chief Minister Stalin orders Rs 183 crore for Pongal bonus

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி 2024-2025ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024-2025ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். 

இதன்படி சுமார் 9 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இந்த உத்தரவின்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000  சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

"சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow