பட்டமளிப்பு விழாவில் RCB கொடி... அக்மார்க் ரசிகையின் நூதன பாராட்டு.. புகழும் நெட்டிசன்கள்..
நெட்டிசன்கள் ரசிகைக்கு கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்2
கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை ரசிகர்கள் மைதானங்களில் முன்பதிவு செய்து, ஆர்வத்துடன் நேரில் ரசித்து வருகின்றனர். ஆனால், படிப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் விளையாட்டை காண முடியாதவர்கள், பல வகைகளில் தங்களுக்கு பிடித்த அணிகளை பாராட்டி வருகின்றனர்.
அதன்படி, அமெரிக்காவில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அங்கு படித்த இந்திய பெண் ஒருவர், பெங்களூரு அணியின் கொடியை, விழா மேடையிலேயே காண்பித்து, பாராட்டு தெரிவித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த லித்திகா என்ற பெண், தனக்கு பட்டமளிக்கப்பட்ட விழாவில், பெங்களூரு அணியின் கொடியை காண்பித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெங்களூரு அணி ரசிகர்களாகிய எங்களுக்கு கிரிக்கெட்டை கடந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக பலமாக இருப்பதை பார்த்தே, நான் இந்த அணியின் ரசிகையாக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் முதலில் மாணவர் ஒருவர் பெங்களூரு அணியின் கொடியை அவிழ்த்துக் காட்ட, பின்னால் வந்த லித்திகா ஆர்.சி.பி அணியின் ஜெர்சியை காட்டிச் சென்றார்.
இப்படி பதிவிட்டு, இவர் வெளியிட்டுள்ள வீடியோ, தற்போது இணையதளத்தில் 4 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சக ஆர்.சி.பி ரசிகர்கள் அவரையும் வாழ்த்தி கமெண்ட்டுகள் இட்டு வருகின்றனர். இன்னொருவர் இவரை ஆர்.சி.பி அணியின் அமெரிக்க தூதர் என்றெல்லாம் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார். ஒரு சிலர் இவருக்கு கண்டனங்களும் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?