கடலில் தவறவிட்ட பணப்பை..! 8 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த அதிசயம்! கனடா பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி..!

8 மாதங்களுக்குப் பிறகு தான் தொலைத்த பொருள் கிடைத்ததால் இளம்பெண் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Feb 20, 2024 - 09:44
Feb 20, 2024 - 09:46
கடலில் தவறவிட்ட பணப்பை..! 8 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த அதிசயம்! கனடா பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி..!

கடலில் தவறவிட்ட பணப்பை 8 மாதங்களுக்குப் பிறகு கிடைத்ததால் கனடா பெண் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொலம்பியாவில் டோபினோவுக்கு அருகில் உள்ள தீவில் வசித்து வருபவர் மார்சி கால்வேர்ட்டு. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படகில் பயணம் செய்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாகத் தனது பணப்பையைக் கடலில் தவறவிட்டுள்ளார். அந்த பையில் முக்கிய ஆவணங்கள், கார்டுகள் மற்றும் பணம் இருந்ததால் நீச்சல் தெரிந்த நபர்கள் மூலம் கடற்பகுதியில் தேடியுள்ளார்.ஆனால் அவர் தொலைத்த பணப்பை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தனது செல்லப்பிராணியைக் கடற்கரை பகுதியில் அழைத்துச்சென்றுள்ளார்.அப்போது கரை ஒதுங்கிய குப்பைகளுடன் தான் கடலில் தொலைத்த பணப்பையும் கிடைத்துள்ளது.

8 மாதங்களுக்குப் பிறகு தான் தொலைத்த பொருள் கிடைத்ததால் இளம்பெண் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,    "உப்புடன் கூடிய எனது பணப்பையை மீட்டுள்ளேன்.எந்த வித சேதமும் ஏற்படவில்லை.தற்போதுதான் மனநிறைவாக உணர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow