ஆசிய கண்டமே ஆபத்துல இருக்கு... வெப்ப அலை மேலும் உயரும்...எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி நிறுவனம்!

பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

May 1, 2024 - 20:55
ஆசிய கண்டமே ஆபத்துல இருக்கு... வெப்ப அலை மேலும் உயரும்...எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி நிறுவனம்!

ஆசியா முழுவதும் கடும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கனடாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கத்திரி வெய்யில் இன்னும் தொடங்கவேயில்லை ஆனால் அதற்குள் இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெய்யில் சதமடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தளவில், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டே விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா இப்படி வெயிலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஆசிய நாடுகள் மொத்தமும் கடும் வெப்ப அலை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக கூறுகிறது கனடாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று. உலக சுகாதார மையத்துடன் இணைந்து உலகளாவிய முறையில் வானிலை ஆய்வை மேற்கொண்டபோது தெரியவந்திருக்கும் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அதிகபட்சமாக இந்தியாவில் 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தாய்லாந்து 44.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வங்காளதேசத்தில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறைந்தபட்சமாக இந்தோனேஷியாவில்தான் 33 டிகிரி செல்சியஸ் வெய்யில் பதிவாகியுள்ளது. ஆசிய கண்டத்தில் வெப்பநிலை இப்படி இருக்கும் நிலையில், இது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் எச்சரித்திருக்கிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு, வெப்ப தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் பணியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை உலக சுகாதார மையமும் உறுதி செய்திருக்கும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow