நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... தங்கம், வெள்ளி விலை சரிவு!

இன்று தங்கம் வெள்ளி விலை குறைந்துள்ளது.

Jul 17, 2026 - 10:26
நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... தங்கம், வெள்ளி விலை சரிவு!

சர்வதேச பொருளாதார சூழல் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலை நேற்று முன்தினம் (15.07.2026) சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 1,05,440 க்கும், கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ரூ 13,180க்கும், விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று  (16.07.2026)  நிலவரப்படி  சவரனுக்கு ரூ 240 குறைந்து ரூ 1,05,200 க்கும், கிராமுக்கு ரூ 30 குறைந்து ரூ 13,150 க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 1,05,200 க்கும்,கிராமுக்கு, ரூ 50 குறைந்து ரூ 13,100 க்கும், விற்பனையாகிறது.

தங்கம் விலை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 235க்கும், பார் வெள்ளி 2,35,000 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow