ஹோல்சேல் ரேட்டில் தங்கமா? தமிழ்நாட்டு மக்களுக்கு ஆச்சரியம் தரும் ரீகல் ஜுவல்லர்ஸ்
பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிம்ரன் ஆகியோர் தமிழ்நாட்டிற்கான ரீகல் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இந்த முக்கியமான தருணத்தை முன்னிட்டு, பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிம்ரன் ஆகியோர் தமிழ்நாட்டிற்கான ரீகல் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த விற்பனையாளர் என்ற முறை
சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தனது ஷோரூமைத் தொடங்கவுள்ள ரீகல் ஜுவல்லர்ஸ், தமிழ்நாடு முழுவதும் பல ஷோரூம்களை அமைக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கத்தை மேற்கொள்கிறது. 48 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் ரீகல் ஜுவல்லர்ஸ், சிறந்த டிசைன்கள், தரமான நகைகள், வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவில் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
நகை உற்பத்தியாளர் மற்றும் மொத்த விற்பனையாளர் என்ற முறையில், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது நகைகளை நிறுவனத்திலேயே வடிவமைத்து தயாரித்து, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
ரீகல் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டுக்கு வருகிறது
இடைத்தரகர்கள் இல்லாததால், உயர்ந்த தரத்தைக் கடைப்பிடித்துக்கொண்டே நகைகளை மொத்த விலையில் வழங்க முடிகிறது. ரீகல் ஜுவல்லர்ஸில் உள்ள ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்டு 916 HUID ஹால்மார்க் செய்யப்பட்டதாக இருக்கும். இதன் மூலம் நகைகளின் உண்மைத்தன்மை, தூய்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு விரிவாக்கம் குறித்து ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விபின் சிவதாஸ் தெரிவித்ததாவது:-
“தங்க நகை வாங்குவது குறித்த வாடிக்கையாளர்களின் பார்வையை மாற்றுவதற்காக ரீகல் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டுக்கு வருகிறது. ஒரு உற்பத்தியாளர் மற்றும் மொத்த விற்பனையாளரிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு மாற்றம் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த எங்களுடைய விளம்பர வரியான, ‘இந்த மாற்றம்... அது நல்லதுதானே?’ பிரதிபலிக்கிறது.”
மொத்த விற்பனையில்..
“தமிழ்நாட்டில் எங்களுடைய பயணத்தைத் தொடங்குவது, ரீகல் ஜுவல்லர்ஸின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சென்னை மற்றும் புதுச்சேரி ஆகியவை தமிழ்நாட்டிற்கான எங்களுடைய நீண்டகாலத் திட்டத்தின் தொடக்கம் மட்டுமே. ஒரு நகை உற்பத்தியாளர் மற்றும் மொத்த விற்பனையாளரிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவதன் நன்மைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்.”
மேலும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,
“நகை உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையில் 48 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ஒவ்வொரு டிசைனையும் நாங்களே உருவாக்கி, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இதன் மூலம் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் சிறந்த மதிப்பையும் பராமரித்துக்கொண்டே, ஒவ்வொரு கிராம் தங்கத்தையும் சரியான விலையில் வழங்க முடிகிறது,” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கான நீண்டகாலத் திட்டம்
நகை வாங்குவதில் தனித்துவமான பாரம்பரியமும், தரம் மற்றும் டிசைன் குறித்த நல்ல புரிதலும் கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக ரீகல் ஜுவல்லர்ஸ் நம்புகிறது. விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களிடம் நகைகளை கொண்டு சேர்க்கும் வணிக முறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி, நகை வாங்கும் அனுபவத்தை புதிய வகையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய மற்றும் நவீன டிசைன்களில் கலெக்ஷன்கள், 100% HUID 916 ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள், சான்றளிக்கப்பட்ட வைரம் மற்றும் கல் நகைகள், வெளிப்படையான விலை நிர்ணயம், ஹோல்சேல் விலையின் நன்மைகள், உண்மையான மதிப்பு, மேலும் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் எந்த சமரசமும் இல்லாத உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வழங்குவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளவுள்ள தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரீடெயில் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, ஷோரூம் ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ், நிர்வாகம் மற்றும் பிற துணைப் பிரிவுகளில், வரும் ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க ரீகல் ஜுவல்லர்ஸ் திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், நகைத் துறையிலேயே சிறந்த சம்பளம் திட்டமிட்டுள்ளது,முறையான பயிற்சி, தொழில் வளர்ச்சி மற்றும் நீண்டகால முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இத்துறையில் வேலைவாய்ப்புக்காக அதிகம் விரும்பப்படும் நிறுவனங்களில் ஒன்றாக உருவாகும்.
வாழ்க்கையில் மாற்றத்தை...
நிறுவனத்தின் ஊழியர்களை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை குறித்து நிர்வாக இயக்குநர் பல்லவி நாம்தேவ்:- “ரீகல் ஜுவல்லர்ஸில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியால் மட்டும் உண்மையான வெற்றி அளவிடப்படுவதில்லை; மக்களின் வாழ்க்கையில் அது உருவாக்கும் நல்ல தாக்கத்தின் மூலமும் வெற்றி அளவிடப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் எங்களுடைய பயணத்தைத் தொடங்கும் இந்தத் தருணத்தில், பெண்களுக்கு அதிகாரமளிக்கும், குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் சமூகங்களை வலுப்படுத்தும் அர்த்தமுள்ள முயற்சிகள் மூலம் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் நம்பகமான பங்குதாரராக உருவாகவும் ஆவலுடன் இருக்கிறோம்.”
அதிகமான டிசைன் கலெக்ஷன்கள்
ரீகல் ஜுவல்லர்ஸின் சேர்மன் சிவதாசன் தாமரசேரி தெரிவித்ததாவது:- “தமிழ்நாட்டு மக்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்கவும், நிறுவனத்தின் விரிவாக்கத்துடன், சமூகத்தை மையமாகக் கொண்ட முயற்சிகள் மூலம் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் ரீகல் ஜுவல்லர்ஸ் ஆவலுடன் இருக்கிறது.”
ரீகல் ஜுவல்லர்ஸ் குறித்து: ரீகல் ஜுவல்லர்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றாகும்.
தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான மதிப்பு ஆகியவற்றில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படும் ரீகல் ஜுவல்லர்ஸ், நகை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக மொத்த விலையில் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சான்றளிக்கப்பட்ட மற்றும் 916 HUID ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள், அதிகமான டிசைன் கலெக்ஷன்கள் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை ஆகியவை ரீகல் ஜுவல்லர்ஸின் முக்கியமான சிறப்பம்சங்களாகும்.
What's Your Reaction?





