Rajini Kamal: சேனாபதியை சந்தித்த வேட்டையன் ரஜினி... கமலின் இந்தியன் 2-க்கு இப்படியொரு ப்ரோமோஷனா?

இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசனை வேட்டையன் ரஜினி சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Jun 27, 2024 - 13:13
Rajini Kamal: சேனாபதியை சந்தித்த வேட்டையன் ரஜினி... கமலின் இந்தியன் 2-க்கு இப்படியொரு ப்ரோமோஷனா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கூலி ஷூட்டிங் அப்டேட் குறித்து நேற்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போட்டோ இணையத்தை கலக்கியது. அதேபோல் ரஜினியின் இன்னொரு போட்டோவும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் பல வருடங்களாக நண்பர்களாக வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

40 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவின் தனிப் பெரும் அடையாளமாக மாஸ் காட்டி வருகின்றனர். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது இருவருமே ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசியது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் வேட்டையன், இந்தியன் 2 படங்களின் படப்பிடிப்பு ஒரே ஸ்பாட்டில் நடைபெற்றபோது இருவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்டனர். அப்போது ரஜினியும் கமலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 

அதே ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பிலும், ரஜினி வேட்டையன் லுக்கிலும் ஒன்றாக போட்டோ எடுத்துள்ளனர். அது தற்போது வெளியாகி இருவரது ரசிகர்களுக்கும் கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது. கமல் இந்தியன் தாத்தாவாக மிரட்டலாக போஸ் கொடுக்க, ரஜினி எப்போதும் போல கூலாக இருக்கிறார். இருவருக்கும் நடுவில் நிற்பது இயக்குநர் ஷங்கரின் மேனேஜர் எனசொல்லப்படுகிறது. கமல் வில்லனாக நடித்துள்ள கல்கி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் சுப்ரீம் டாஸ்கின் என்ற கேரக்டரில் நடித்துள்ள கமல், இரண்டே காட்சிகளில் மட்டுமே வந்து மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2, அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்வார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அவரோ இமயமலைக்கு செல்வதாக எஸ்கேப் ஆகிவிட்டார். இந்தியன் 2 ரிலீஸாகும் முன்னர் அதன் ப்ரோமோஷனில் ரஜினியின் டச் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு நினைத்ததோ என்னவோ. இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை நேரம் பார்த்து களத்தில் இறக்கியுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கொடுத்த கூலி அப்டேட்டால் ரஜினி ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இன்னொரு பக்கம் கல்கி திரைப்படம் ரிலீஸானதை அடுத்து கமல் ஹேஷ்டேக்கும் வைரலாகிறது. இந்த கேப்பில் வேட்டையன் லுக்கில் ரஜினியும், இந்தியன் தாத்தாவாக கமலும் இருக்கும் போட்டோ வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow