விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் படப்பிடிப்பு... சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார்...

Feb 29, 2024 - 11:34
விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் படப்பிடிப்பு... சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார்...

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.

3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இதற்காக கடந்த 27-ம் தேதி ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று வியாழக்கிழமை (29.02.2024) சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்ற அவரது ரசிர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow