மேற்கு வங்கத்தையே அலறவிட்ட ஷேக் ஷாஜகான் 55 நாட்களுக்கு பின் கைது... நடந்தது என்ன?

Feb 29, 2024 - 11:14
மேற்கு வங்கத்தையே அலறவிட்ட ஷேக் ஷாஜகான் 55 நாட்களுக்கு பின் கைது... நடந்தது என்ன?

மேற்கு வங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் நில அபகரிப்பு, வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை, 55 நாட்களுக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேஷ்காலியில் ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு சோதனை மேற்கொள்ளச்சென்ற போது அமலாக்கத்துறை அதிகாரிகளை அடித்து விரட்டியதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். தொடர்ந்து ஆதரவாளர்கள் உதவியுடன் பழங்குடியினத்தவர்களின் நிலத்தை அபகரித்து, கணவர்களை மிரட்டி பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வரச்செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேஷ்காலியில் போராட்டம் வலுத்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஷேக் ஷாஜகானை மாநில அரசு கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்நிலையில் தலைமறைவான 55 நாட்களுக்குப்பின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வைத்து ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளை அடித்து விரட்டிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிற புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மேற்குவங்க போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow