தொடங்கியது ரமலான்... இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை...

தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்புத் தொழுகையைத் தொடங்கினர்.

தொடங்கியது ரமலான்... இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை...

புனித ரமலான் பண்டிகைக்கு முன்னதாக ஒரு மாத காலத்துக்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது மரபாகும். 30 நாட்கள் தொடங்கும் விரதமானது இஸ்லாத்தின் 5 கடமைகளை உணர்த்துகிறது. இதில் பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும் ஏழைகளுக்கு தர்மம் செய்ய உதவுவது, ஆன்மாவை தூய்மைப்படுத்தி கொள்வது போன்ற 5 கடமைகளை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர். முன்னதாக சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாத நோன்பு தொடங்கியது.

தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கி விட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்தார். இதையடுத்து உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் புனித ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு முதல் நாள் ரமலான் விரதத்தைத் தொடங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow