"பிளவுவாத அரசியலை ஏற்க முடியாது"... விஜய்யிடம் இருந்து வந்த முதல் அரசியல் அறிக்கை...
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த ஒரு சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று விஜய் திட்டவட்டமாக அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு அரசியல் களத்தில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரிடம் இருந்து முதல் அரசியல் அறிக்கை வந்திருக்கிறது.
கட்சியின் கொள்கை குறித்து இதுவரை பேசாத விஜய், தமது நிலைப்பாட்டை வெளி உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் அந்த முதல் அரசியல் அறிக்கை உள்ளது. அறிக்கையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தம் என குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த ஒரு சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
விஜய்யின் இந்த அறிக்கையை விமர்சித்திருக்கும் திமுக, சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கேள்வி கேட்காமல், மாநில ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுவது, அவர் அரசியலில் கத்துக்குட்டி என்பதை காட்டுவதாக சாடியிருக்கிறது.
விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வுகள், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தமா? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாநில கட்சிகள் அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றுவது, விஜய்யை முழுநேர அரசியல் வாதியாக மாற்றும் செயலாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?