காவிரி நீர் வரவில்லையென்றால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்...

கர்நாடகத்தின் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தரமாட்டேன் என்று கூறிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது கண்டனம் பதிவு செய்திருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேசியக் கட்சிகள் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் நடந்துகொள்வதைப் பார்த்தால் அவர்கள் போடும் வேஷமும், பாசாங்குத்தனமும் நன்றாகத் தெரிவதாக விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு காவிரி பிரச்னையில் மெளனம் காப்பாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்ந்து  தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க போராடும் என்று குறிப்பிட்டு  இருக்கிறார். 

காவிரி நீர் வரவில்லையென்றால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், தமிழ்நாட்டு முதல்வர் காவிரித் தாயை பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழினிசாமி அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow