மேட்டுப்பாளையம்:மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு 

இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Jan 12, 2024 - 22:07
மேட்டுப்பாளையம்:மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு 

மேட்டுப்பாளையம் அருகே மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது.அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை அறிந்த விவசாயிகள் இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த  பெண் காட்டு யானைக்கு 5வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.தற்போது அதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.யானையின் பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow