ராணிப்பேட்டையில் ஜூன் 9 வரை டிரோன்களை பறக்க விடக்கூடாது.... எச்சரிக்கும் போலீஸ்
தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது
ராணிப்பேட்டையில் ஜூன் 9-ம் தேதி வரை டிரோன்களை பறக்க தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல், 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாட்டிற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், அரக்கோணம் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ளது,
மேலும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 250 CCTV கேமராக்கள் மூலம், 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் கட்டுப்பாட்டு அறையினையும் அதிகாரிகள் நாள்தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில், மாவட்டம் தோறும் டிரோன்கள் பறக்க தடை விதித்து, காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்தபோது, அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியிலிருந்து சுமார் 3.00 கி.மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று கூறினார். மேலும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவித்துள்ளார். தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
What's Your Reaction?