கவுன்சிலர் கணவருக்கும் மேடையில் இருக்கை... எம்.பி ஜோதிமணி நிகழ்ச்சியில் சர்ச்சை

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை

Feb 17, 2024 - 08:39
கவுன்சிலர் கணவருக்கும் மேடையில் இருக்கை... எம்.பி ஜோதிமணி நிகழ்ச்சியில் சர்ச்சை

கரூரில் எம்.பி ஜோதிமணி பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகளுக்கு சமமாக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் இருக்கை வழங்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவின் பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சி மேடையில் ஆட்சியர், எம்.பி, வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு சமமாக, 39-வது வார்டு கவுன்சிலரான சூரியகலாவின் கணவருக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow