டாஸ்மாக் மூலம் ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு தகவல்
2023-24 ஆம் ஆண்டில் 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் 4,64,152 லிட்டர் கள்ள சாராயங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை விட 1734.54 நாள் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 2023- 24 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் 1,734 கோடியே 54 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் தவிர இதர நாட்களில் இயங்கியதன் மூலம் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதலை தடுக்க மாவட்ட காவல்துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடைபெறுகின்றன. 2023-24 ஆம் ஆண்டில் 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் 4,64,152 லிட்டர் கள்ள சாராயங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2023-24 நிதி ஆண்டில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 10,213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22,969 கிலோ கஞ்சாவும் 246 கிலோ கஞ்சா சாக்லேட் கைப்பற்றப்பட்டது.
இவை தவிர, மற்ற போதைப் பொருட்களான இபுபுரூபன் 101 கிலோ, எப்பிட்ரின் 18 கிலோ, மெத்தம்பட்டமைன் 7 கிலோ, ஹெராயின் 953 கிராம் மயக்கமூட்டும் மாத்திரைகள் 56,460 கைப்பற்றப்பட்டதாக கொள்கை குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 14,447 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக 15,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்தை 47 ஆயிரத்து 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?