கிராம உதவியாளர் நியமனத்தில் ஆள்மாறாட்டம்… RTI மூலம் வெளியான பகீர் தகவல்!

2022 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் தவறான ஆவணங்கள் மூலம் மோசடி நடந்துள்ளதாக RTI மூலம் தகவல் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 24, 2024 - 17:45
கிராம உதவியாளர் நியமனத்தில் ஆள்மாறாட்டம்… RTI மூலம் வெளியான பகீர் தகவல்!

மதுரை மாவட்டத்தில் உள்ள 11  தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2022 நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத்தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டாச்சியர் அலுவலகங்களில் நேர்காணல் நடத்தப்பட்டதோடு, அதன் முடிவுகள் கடண்ஆ 2023 டிசம்பர் 28 ஆம் தேதி வெளியாகின. இதனையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 209 பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த கோட்டைத்திருப்பதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 11 தாலுகா அலுவலகங்களுக்கும் 2022 ஆம் தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர்களின் விவரங்களை கேட்டுள்ளார்.

அவருக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஆகிய இரண்டு தாலுகாவிற்கு உட்பட்ட அலுவலக உதவியாளர்களின் தேர்வு செய்யப்பட்ட விவரங்களை மட்டுமே RTI மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. மற்ற தாலுக்காவில் பணியாற்றக்கூடிய உதவியாளரின் பெயர் விவரங்களை கொடுக்கவில்லை. கிடைக்கப்பெற்ற 2 தாலுக்காவில் தேர்வுசெய்யப்பட்டு பணியாற்ற கூடிய உதவியாளர்களின் விவரங்களை பெற்றுள்ளார். அதில் உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உதவியாளராக பணி நியமன நேர்காணல் மற்றும் தேர்வில் ஆணிண் (ஞானசுந்தரம்) பெயரில் பெண்ணின் புகைப்படத்துடன் தேர்வு நடந்துள்ளதும், விண்ணப்பத்தில்  ஆண் என குறிப்பிட்ட நிலையில் பெண்ணின் புகைப்படத்துடன் தேர்வில் கலந்துகொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆண் பெயரில் இருந்த விண்ணப்பம் மற்றும் ஹால் டிக்கெட்டுகளில் பெண் ஒருவருடைய புகைப்படம் மற்றும் தேர்வறையில் வருகை பதிவேடு பெண் புகைப்படம் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதேபோன்று கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அலுவலக உதவியாளர் (கிருஷ்ணமூர்த்தி) நியமனத்தில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதில் பெற்றோர் இறந்ததற்கான இறப்பு சான்றிதழில் 2017 மற்றும் 2010 ஆம் ஆண்டு என கொரோனாவிற்கு முந்தைய ஆண்டுகளில் இறந்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைய தலைமையிலான விசாரணைக்கு கோட்டைத்திருப்பதி நேரில் ஆஜரானார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோட்டை திருப்பதி, “2022 காலகட்டத்தில் தாசில்தார்களுடைய செல்போன் உரையாடுதல்களை முழுமையாக எடுத்தால் இது போன்ற முறைகேடுகளில் யார் யார் ஈடுபட்டார்கள் என்ற விவரம் வெளியாகும்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow