SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..! எப்படி பார்ப்பது..?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

May 9, 2024 - 12:31
SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..! எப்படி பார்ப்பது..?

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இதையடுத்து 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா அறிவித்தார். இந்த நிலையில்  விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகிறது. 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
இதனிடையே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow