ரூ.1 கோடி திமிங்கல எச்சம்.. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தவர் கைது

May 9, 2024 - 12:52
ரூ.1 கோடி திமிங்கல எச்சம்.. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தவர் கைது

நாகர்கோவிலில் இருந்துசென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்குரிய வகையில் சென்று சென்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் இருப்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தவர் பெயர் சிலம்பரசன் என்பதும், இதை அவர் நாகர்கோயிலில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திமிங்கல எச்சம் எனும் அம்பர்கிரிஸ் சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் உயர்தரமான வாசனை திரவியங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow