மார்த்தாண்டத்தில் டாரஸ் லாரி மோதி பள்ளி ஆசிரியை தலை நசுங்கி பலி-போலீஸ் விசாரணை

பொங்கல் முடிந்து மகளை பார்க்க வெளிநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jan 13, 2024 - 23:43
மார்த்தாண்டத்தில் டாரஸ் லாரி மோதி பள்ளி ஆசிரியை தலை நசுங்கி பலி-போலீஸ் விசாரணை

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி இருசக்கரத்தின் பின்னால் மோதி ஏற்பட்ட விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம்,மார்த்தாண்டத்தை அடுத்த கொறட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஞானத்தாஸ்.ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவருடைய மனைவி பீனா(52)தனியார் பள்ளி ஆசிரியை.இருவரும் சேர்ந்து இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பீனாவின் சகோதரியின் வீட்டிற்கு செல்வதற்க்காக வேண்டி மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மேம்பாலம் முடியும் இடத்தில் பின்னால் அதிக பாரத்துடன் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது.இதில் ஞானதாஸ் மற்றும் பீனா இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் மீனா டாரஸ் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.உடனே அக்கம்பகத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஞானதாஸ் மற்றும் பீனாவின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பீனாவின் ஒரு மகள் வெளிநாட்டில் தங்கி இருக்கும் நிலையில் பொங்கல் முடிந்து மகளை பார்க்க வெளிநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow