காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் மீது அவதூறு: மாநகராட்சி ஊழியர்கள் கண்டனம்!

போராட்டம் செய்ய நான் கூறவில்லை, அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் இப்போராட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Dec 12, 2023 - 12:08
Dec 12, 2023 - 17:22
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் மீது அவதூறு:  மாநகராட்சி ஊழியர்கள்  கண்டனம்!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரை அரசியல் கட்சி பிரமுகர்கள் அவதூறாக பேசி வருவதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வருபவர் செந்தில் முருகன்.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இங்கு தற்போது பணியிலுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இவரை அலுவலகத்தில் சந்திக்க முயன்றபோது முறையாக அணுகவில்லை எனக்கூறி அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில் அதிமுகவினர் தங்களது கட்சி தலைவியை அவதூறாக பேசியதாக அதற்கான விளக்கங்கள் கேட்டபோது இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது.அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையரை பணி செய்ய விடாமல் அரசியல் கட்சியினர் முயன்று வருவதாகவும்,அரசு அதிகாரி என்றும் பார்க்காமல் அவதூறாக பேசியதை கண்டித்து இன்று மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அரசு அலுவலர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் அவதூறாக பேசி வருவதை வன்மையாக கண்டிப்பதாக கோஷங்கள் எழுப்பி பத்து நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, போராட்டம் செய்ய நான் கூறவில்லை,அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் இப்போராட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow