இது நாடா சுடுகாடா?.. குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம் கேவலம்.. கொந்தளிக்கும் சீமான்
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் சாவு அதிகமாகும். அரசு அறிவித்த நிவாரணம் குறித்து அனுதாபமோ ஆறுதல் கிடையாது. ஆத்திரம் தான் ஏற்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ரூ.10 லட்சம் தந்ததும் குணமாகி வீட்டிற்கு போனவன் மீச்சம் இருந்த சாராயத்தை குடித்து செத்து போகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவனுக்கு ரூ.50 ஆயிரம் என்றதும் கள்ள சாராயம் குடிக்காமல் டாஸ்மாக்கில் சரக்கு அடித்தவன் வந்து படுத்துகிறான் என்றும் சீமான் கிண்டலடித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்தவர்களில் 58 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்.
உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. சட்டசபையிலும் இந்த சம்பவம் பெரும் அனலை கிளப்பி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் முதுகலை தேர்வை தற்காலிகமாக தள்ளி வைத்து உள்ளனர். ஆனால் நீட்டை நிரந்தரமாக தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வினால் எவ்வளவு பிரச்சனைகள் வந்து உள்ளது. நீட் தேர்வினால் போலியான மருத்துவர்களை உருவாக்குமே தவிர தரமான மருத்துவர்களை உருவாக்காது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறீர்கள். ஆனால் நாட்டின் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கூட தகுதிவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நீட் உள்பட எல்லா தேர்வுகளை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் தருகிறீர்கள்.
ஏற்கனவே இருந்த தேர்வு முறையில் என்ன தவறு இருந்தது. தமிழ்நாட்டில் ஹெட்போன் வைத்து தேர்வு எழுதியவர்களை கண்டுபிடித்தால் கைது செய்யப்பட்டனர். இது போல் கண்டுபிடிக்காமல் எத்தனை பேர் தேர்வு எழுதி இருப்பார்கள்.
வட மாநிலங்களில் பிரச்சனை வந்ததும் கொந்தளிக்கிறார்கள். இவி எம் மிஷன் போல் நீட் தேர்வும் பிராடு. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் யாரும் மருத்துவ்ராக முடியாது.
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் சாவு அதிகமாகும். அரசு அறிவித்த நிவாரணம் குறித்து அனுதாபமோ ஆறுதலோ கிடையாது. ஆத்திரம் தான் ஏற்படுகிறது. நாட்டில் அதிகமாக நிவாரணம் தந்தது சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தான். இது நாடா சுடுகாடா? குடிக்க வைத்து தாலி அறுப்பது தான் அரசின் கடமையா கள்ள சாராயம் குடித்து சாகிறவனை ஊக்கப்படுத்துவதா
ரூ.10 லட்சம் தந்ததும் குணமாகி வீட்டிற்கு போனவன் மீச்சம் இருந்த சாராயத்தை குடித்து செத்து போகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவனுக்கு ரூ.50 ஆயிரம் என்றதும் கள்ள சாராயம் குடிக்காமல் டாஸ்மாக்கில் சரக்கு அடித்தவன் வந்து படுத்துகிறான்.
உழைக்கிறவனுக்கு விவசாயத்திற்கு ஊக்கப்படுத்தவில்லை. மீனவன் செத்த போது வரவில்லை. எல்லையில் செத்த ராணுவத்திற்கு வரவில்லை. சாராயம் குடித்து செத்தவனுக்கு விழுந்து விழுந்து போய் பார்க்கிறீர்கள். குடும்ப தலைவிக்கு ரூ ஆயிரம் தான். குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம் கேவலமாக இருக்கு என்று சீமான் கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.
What's Your Reaction?