கோவை,நீலகிரி,திருப்பூரில் அடி வெளுக்கப்போகும் மழை.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க

சென்னை: கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Jun 24, 2024 - 07:06
கோவை,நீலகிரி,திருப்பூரில் அடி வெளுக்கப்போகும் மழை.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க


தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பின்னரும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென்று குளிர் காற்று வீசி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி வரைக்கு தமிழ்நாட்டில் மேற்கு மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ( ஜூன் 24)தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய தினம் (ஜூன் 25)ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, இண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் 26ஆம் தேதி  முதல் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow