நீலகிரி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ... சாம்பலான தனியார் விடுதி மரவீடு...
நீலகிரி வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் ஏராளமான மூங்கில் மரங்களும், தனியார் விடுதியின் மரவீடும் எரிந்து நாசமானது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி மசினகுடி பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடித்ததாக தெரிகிறது. இதையடுத்து காய்ந்த மூங்கில் மரங்கள் மளமளவென தீ கொளுந்துவிட்டு எரிந்தது. 50 அடி உயரத்திற்கு நெருப்பு சுவாலை எழ அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த தீ ஆச்சக்கரை பகுதியில் இருந்த தனியார் தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த மர வீடு எரிந்து சாம்பலானது. அப்போது நல்வாய்ப்பாக மரவீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து குறித்து கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், விடுதியில் இருந்த தண்ணீர் பைப் மூலம் தீ எரியாத பகுதிகளில் தண்ணீரை பீச்சி அடித்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுத்தனர்.
What's Your Reaction?