மூளைச்சாவு அடைந்த விராலிமலை பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...

Mar 13, 2024 - 10:04
மூளைச்சாவு அடைந்த விராலிமலை பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விராலிமலையை சேர்ந்த இளம்பெண்ணின் உடல் தானம் செய்யப்பட்ட நிலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வந்த சுப்ரமணி, சுஷ்மிதா தம்பதிக்கு ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 10-ஆம் தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்று விட்டு மூவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில்  சுப்ரமணி, ஹரிணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சுஷ்மிதா சுய நினைவின்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த சுஷ்மிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து கல்லீரல், இருதயம், தோல், சிறுநீரகம் உள்ளிட்டவைகள் மருத்துவர்கள் துணையோடு சுஷ்மிதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு பத்திரமாக சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்னர் உயிரிழந்த சுஷ்மிதாவின் உடல் அவரது கணவரின் சொந்த ஊரான விராலிமலை கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் கோட்டாட்சியர் தெய்வநாயகி, தாசில்தார் கருப்பையா சுஷ்மிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow