கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு செல்வபெருந்தகை வார்னிங்?

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வ பெருந்தகை எச்சரித்துள்ளார்.

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு  செல்வபெருந்தகை வார்னிங்?
The alliance should not be discussed in public

காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் ஒருவரான டி.எம்.காளியண்ணா கவுண்டரின் 105வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனின் கொண்டாடப்பட்டது. அங்கு அவரது புகைப்படத்திற்கு அக் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்ததை மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்: சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து, பா.ஜ.க. தற்போது திரைப்பட தணிக்கை வாரியத்தையும் (சென்சார் போர்டு) தனது ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. மேலும் பேசிய அவர், தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், அதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்வதில்லை, தரகர் வேலையும் பார்ப்பதில்லை, இந்தியா கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது, தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது.பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்து பொதுவெளியில் பேசினால், அது பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும்.

சென்னையில் நடைபெறும் ஜனநாயக பொங்கல் விழாவில் கூட்டணி குறித்துப் பேசி குழப்பம் விளைவிப்போர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow