தொகுதி கெட்டுபோனதுக்கு காரணமே இந்தாளு தான்... முன்னாள் எம்.பி.யை வசைபாடிய முன்னாள் எம்எல்ஏ
திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில் நல்ல தம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்ட விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை அறிமுகம் செய்து வைத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பேசி வந்தனர்.
அப்போது திருவள்ளூர் முன்னாள் எம்.பி. வேணுகோபால் மேடையில் பேசி கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த பூந்தமல்லி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மணிமாறன் "இந்த தொகுதி கெட்டதற்கு காரணமே இந்தாளு தான்" என்றும்" இவர் இல்லனா நான் எம்எல்ஏ ஆயிருப்பேன்" என்றும் வேணுகோபாலை பார்த்து ஆவேசமாக பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையிலேயே முன்னாள் எம்.பியை, முன்னாள் எம்எல்ஏ ஆவேசமாக வசை பாடியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் வேட்பாளர் அறிமுக மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?