உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு 

தயாரிப்பாளர் தரப்பில் நாளை மறுநாள் (12-ந்தேதி) திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த மேல்முறையீட்டின் போது தங்களது தரப்பு பாதிப்புகளை எடுத்து கூறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு 
Janyayan Film Production Company

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. 

இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நேற்று (ஜனவரி 09) தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. தணிக்கை வாரியம் (சென்சார் படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. இந்த பிரச்னை காரணமாக 'ரிலீஸ்' நிறுத்தி வைக்கப்பட்டது. 

பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக்ஷன்ஸ் சார்பில், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத்தது.  மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, "தணிக்கை சான்று வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து வழக்கை, ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

'ஜனநாயகன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் விரைவில் விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow