தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் செங்கோட்டையன் ? வரும் 27-ம் தேதி விஜயை சந்திக்கிறார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் வரும் 27-ந் தேதி, நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் செங்கோட்டையன் ? வரும் 27-ம் தேதி விஜயை சந்திக்கிறார்
Sengottaiyan to join Tamil Nadu Vetri Kalgam

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். அதிமுகவை ஒருங்கிணை போவதாக செங்கோட்டையன் அறிவித்தார். எடப்பாடி சுற்றுப்பயணம் உள்பட அவரது நிகழ்ச்சிக்களையும் செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். 

இந்த நிலையில் தேவர் ஜெயந்தி அன்று சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இதன் காரணமாக அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி நீக்கினார். 

தற்போது கோபிசெட்டி பாளைய சட்டமன்ற உறுப்பினராக செங்கோட்டையன் உள்ளார். இதனிடையே ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் 30–ந் தேதி – ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். 

இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்பாக எடப்பாடிக்கு ஷாக் கொடுக்க செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் கோபிசெட்டி பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் 30-ம் தேதிக்கு முன்பாக வரும் 27-ம் தேதி விஜயை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணையவுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow