"திமுகவின் தவறான ஆட்சியால் சோர்வடைந்த தமிழ்நாடு" பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்...

திமுகவின் தவறான ஆட்சியால் தமிழ்நாடு மக்கள் சோர்வடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

"திமுகவின் தவறான ஆட்சியால் சோர்வடைந்த தமிழ்நாடு" பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்...

"எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, நமோ செயலி மூலம் இன்று மாலை பாஜக தொண்டர்களிடையே உரையாற்றுகிறார். இதுதொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் பாஜக தொண்டர்களுடன் இன்று உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் மாநிலத்தில் உள்ள தங்களது கட்சியினர் மக்கள் மத்தியில் திறம்பட பணியாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவின் தவறான ஆட்சியால் சோர்வடைந்த தமிழக மக்கள், தங்கள் கட்சியை நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow