அரசியலே வேண்டாம் : கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன் டிச.20ம் தேதி அறிவிப்பை வெளியிடுகிறார் ?
அரசியலே வேண்டாம் என்றும், கட்சியை கலைக்கும் முடிவை தமிழருவி மணியன் எடுத்துள்ளார். இந்த அறிவிப்பை டிச.20ம் தேதி அவர் வெளியிட இருக்கிறார்
தமிழருவி மணியன் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி மற்றும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 1966 இல் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க முயற்சி செய்போது, தமிழருவி மணியன் அவருடன் இணைந்து பணியாற்றினார். ரஜினி கட்சி துவங்கும் முடிவை கைவிட்டதால், தான் தொடங்கிய காந்திய மக்கள் கட்சியை தனது அரசியல் பயணத்தை அவர் தொடர்ந்தார்.
பின்னர் காமராஜர் மக்கள் கட்சி என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில், இந்த கட்சியையும் கலைத்துவிட்டு, அரசியல் இருந்து விலகும் முடிவை தமிழருவி மணியன் எடுத்துள்ளார். வரும் டிசம்பர் 20-ம் தேதி தமிழருவி மணியனின் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இது குறித்து குமுதம் யூடியூப் சேனலுகளுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அரசியல் வாழ்க்கையில் தான் தோற்கடிக்க பட்டதாக தனது வேதனையை பகிர்ந்து கொண்ட அவர். காந்திய மக்கள் கட்சியை கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிச 20-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் காந்திய மக்கள் கட்சி தொண்டர்களை ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் சேர்க்க உள்ளதாகவும், அவருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெ்ரிவித்தார். அரசியலில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்த அவர். ஒருவேளை 2026 சட்டமன்ற தேர்தலில் வாசன் வலியுறுத்தினால். போட்டியிடுவது குறித்து பரீசிலனை செய்வேன் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
What's Your Reaction?

