5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை... சென்னையில் பரபரப்பு...

Mar 2, 2024 - 17:54
5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை... சென்னையில் பரபரப்பு...

சென்னையில் அண்ணாநகர், தியாகராய நகர், திருவான்மியூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த 23ஆம் தேதி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறுவனத்தின் தமிழக கிளை நிறுவனங்கள் உள்ள சென்னை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் சென்னையில் 5 இடங்களில் கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (02.03.2024) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாநகரில் தொழிலதிபர் சுப்ரமணி என்பவர் வீட்டிலும், தியாகராய நகரில் உள்ள அவரது கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருவான்மியூரில் நவீன் என்பவர் வீட்டிலும், கோட்டூர்புரத்தில் உள்ள விஷ்ணு என்பவரின் வீட்டிலும், சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow