செந்தில்பாலாஜி, திமுக நிர்வாகிகள் மீது புகார் - சிபிஐ விசாரணையில் திமுக மீது ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு ?
கரூர் தவெக பிரசார கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட திமுகவினர் சீர்குலைக்க சதி செய்தத்தாக சிபிஐ விசாரணையில் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புகார் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
நவ.16ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 19ம் தேதிக்கு பிறகு 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார்,கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் நேற்று ஆஜராகினர்.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. கரூரில் தனியார் ஹோட்டலில் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் நேற்று தங்கினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்காக 5 கார்களில் இன்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார் காலை சிபிஐ அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகினர். அவர்களிடம் மதியம் 3 மணி வரை விசாரணை நடைபெற்றது.
இதன் பின்னர் தவெக கரூர் மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு ஆகியோர் சிபிஐ முன்பு மீண்டும் ஆஜராகினர்.அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக கரூர் நிர்வாகிகள் சிலர் மீது ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் புகார் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் தவெக கூட்டத்தை சீர்குலைக்க சதி செய்த்தாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட திீமுக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுக்களை தவெக நிர்வாகிகள் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.
What's Your Reaction?

