கோவை செம்மொழி பூங்கா : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பட்டதாக திறந்து வைத்தார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து பூங்கா வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் , தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

கோவை செம்மொழி பூங்கா : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Coimbatore Classical Park

செம்மொழிப் பூங்கா சிறப்புகள்: 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழி பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், மணமகள் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத்தோட்டம், ரோஜா தோட்டம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம் உள்ளிட்ட மர வகைகள் வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு எதுவாக அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், இந்த பூங்காவனத்தில் உலக தரத்தில் உடற்பயிற்சி கூடம், 4000 சதுரடி பரப்பளவில் உள்வண மாதிரி காட்சி அமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்காக 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் , செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் க்யூ ஆர்க்கோடு மற்றும் பார் கோடு போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என்.நேரு, கமுத்துசாமி, மேயர் கா.ரங்கநாயகி, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதல்வருக்கு கட்சியினர் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow