மகளிர் தினத்தன்று ஷாக்... 5வது நாளாக இன்றும் உச்சம் தொட்ட தங்கவிலை...!
ஆபரண தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.48,840-க்கும். கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,105-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.48,840-க்கும். கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,105-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிலோ வெள்ளி ரூ. 500 உயர்ந்து ரூ.79,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?