அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு இரண்டாவது முறையாகத் தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல் நீதிமன்றம்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கடந்த டிச.1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.
ஜாமின் கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மோகனா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கறிஞர் அனுராதா, அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து வாதத்தை முன் வைத்தார். அமலாக்கத்துறை அதிகாரியின் வழக்கறிஞர் ஜாமின் தரலாம் என வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ஜாமின் மனுவை இன்று (பிப்.6) தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் 2வது முறையாக ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி மோகனா.அங்கித் திவாரிக்கு 4வது முறையாகக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.