CSK vs LSG: பெஞ்சில் அமரவைக்கப்பட்ட அஸ்வின்.. புதிய திட்டங்களுடன் களமிறங்கிய தோனி படை
அஸ்வின்,கான்வே ஆகியோர் ஆடும் லெவனிலிருந்து நீக்கப்பட்டுள்ளது சென்னை அணியின் வெற்றிக்கு கைக்கொடுக்குமா? என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த சீசனிலும் இல்லாத அளவில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் சென்னை அணி தோற்றுள்ளதும் இதுவே முதல்முறை.
இந்நிலையில் தான், லக்னோவில் சென்னை மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சிறப்பாக ஆடி சிஎஸ்கே வெற்றிப்பாதைக்கு திரும்புமா என சென்னை ரசிகர்கள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.
அதிரடி மாற்றம்:
சென்னை அணியில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்த அஸ்வின், கான்வே பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார்கள்.ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(w/c), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட்(w/c), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக இந்த தொடரில் பொறுப்பேற்றார். ஆனால் கொல்கத்தாவிற்கு எதிராக தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் தன் ராஜதந்திரங்களை பயன்படுத்தி சென்னை அணியை வெற்றி பாதைக்கு வழி நடத்தி செல்வரா தோனி என ரசிகர்கள் ஏங்கிப்போயுள்ளனர்.
What's Your Reaction?






