Simbu: தக் லைஃப் கொடுத்த ஏஆர் ரஹ்மான்… சிம்புவுக்காக ரெடியான மிரட்டல் ப்ரோமோ!

கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து வருவது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிரட்டலான ப்ரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Apr 30, 2024 - 15:31
Simbu: தக் லைஃப் கொடுத்த ஏஆர் ரஹ்மான்… சிம்புவுக்காக ரெடியான மிரட்டல் ப்ரோமோ!

சென்னை: சிம்புவின் 48வது படமான STR 48 ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதனிடையே கமலுக்காக தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா, ராஜஸ்தான், இப்போது டெல்லியில் தக் லைஃப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சிம்பு பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுவதோடு, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது கமல்ஹாசனும் தக் லைஃப் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். இவர்களுடன் பாலிவுட்டில் இருந்து பங்கஜ் த்ரிபாத், அலி ஃபைசல் ஆகியோரும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம். 

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி ஆகியோருடன் சிம்பு இணைந்து நடித்திருந்தார். தற்போது கமல் – மணிரத்னம் காம்போவில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ப்ரோமோ வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏஆர் ரஹ்மான் பிஜிஎம் உடன் செம்ம மிரட்டலாக உருவாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ, மே 2 அல்லது 3ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தக் லைஃப் டைட்டில் டீசரில் கமல் மட்டும் சோலோவாக மிரட்டியிருந்தார். அதன் பின்னர் டீசர், ப்ரோமோ வீடியோ, கிளிம்ப்ஸ் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் சிம்பு சமீபத்தில் தான் தக் லைஃப் படத்தில் இணைந்ததால், அவருக்காக ப்ரோமோ வீடியோ ரெடியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்களை வெளியிட தக் லைஃப் டீம் பிளான் செய்துள்ளதாம். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் தக் லைஃப் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow