வெப்ப அலை .. இந்த நேரத்தில் மொட்டை போடாதீங்க.. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் Exclusive

வெயில் காலங்களில் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியுள்ளார்.

Apr 30, 2024 - 13:23
வெப்ப அலை .. இந்த நேரத்தில் மொட்டை போடாதீங்க.. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் Exclusive


தமிழகத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் வருகிற மே 4 ஆம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வெப்ப அலை தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் குமுதம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று தினம் தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் ஆனது சதம் அடித்தது. மேலும் தமிழகத்தில் நேற்றைய தினம் ஈரோட்டில் 108°F வெப்பமானது பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் வெப்ப அலையானது மே 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

வெப்ப அலை மற்றும் வெப்ப அலையின் தாக்கம் குறித்தும் இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியுள்ளார். 

தற்போது தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வது தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிக முக்கியமானது. 

வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடி துடிப்பு அதிகரித்தல், அடிக்கடி வியர்த்து கொட்டுவது, முகம் வெளுத்து போகுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இப்படி இருந்தால் உடனடியாக அருகில் நிழலாக இருக்கக்கூடிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தேரணி ராஜன் தெரிவித்தார்.

வெப்பநிலையானது 104°F மேல் சென்றால், ஹீட் எக்ஸாஸ்ட் ஆகிவிடும்.  உடலுக்குள் சென்ற வெப்பமானது உடலில் பல்வேறு வகையான வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும். என்றும், இதனால் கல்லீரல், இதயம் மூளை போன்ற உறுப்புகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. நம் உடலில் உள்ள செல்கள் இறக்கும் பட்சத்தில் நாம் மயங்கி விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. 

வெப்ப மயக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அதிக வெயில் நேரத்தில் வெளியே ஊர் சுற்றக்கூடாது உடனடியாக நிழலாக இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.   ஐஸ் பேக்குகளை உடலில் கை அக்குள் போன்ற பகுதிகளில் வைத்து உடலின் உஷ்ணத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இயற்கை பழ ரசங்கள், நீர் மோர் என நீர் ஆகாரங்களை உடனே பருக வேண்டும் என்றும் டாக்டர் கூறியுள்ளார்.

வெயில் காலங்களில் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோல சாலையில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பழச்சாறு கடைகளில் பழச்சாறு பருவதை தவிர்க்க வேண்டும்.  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து  உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆனால் தற்போது வரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

குழந்தைகளை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாக இருந்தால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற வெப்ப நேரங்களில் தீ விபத்துக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதனை கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் தேரணி ராஜன் கூறினார்.

குடும்பத்தில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருந்திருந்தால், அதே குடும்பத்தில் வேறு ஒரு நபருக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், இது பரம்பரை மூலமாக வரக்கூடியது என்றும் டாக்டர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow