ஆளும் கட்சிக்கு எதிராக சிட்டிங் திமுக எம்எல்ஏ சாலை அமர்ந்து தர்ணா
திருப்பூர் நகர் பகுதியில் குப்பை அள்ளும் விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக சிட்டிங் எம்எல்ஏ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவானது இந்த திருப்பூர் தெற்கு தொகுதி. திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகள் முழுமையாக இத்தொகுதியில் உள்ளன. தவிர, திருப்பூர் புறநகர் பகுதிகளும், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள் தான் வருகின்றன.
மாவட்டத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ள இத்தொகுதியில், பனியன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முக்கிய களமாக இத்தொகுதி உள்ளன.
மக்கள் நெருக்கம் நிறைந்த தொகுதி என்பதால், வாரக்கணக்கில் அள்ளப்படாத குப்பை, சாலைகளில் உடைந்து ஓடும் குழாய் நீர் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டில் கடந்த 3 மாதங்களாக குப்பைகள் எடுக்கவில்லை எனப்புகார் எழுந்தது.
வெள்ளியங்காடு பகுதிக்கு கொண்டு வந்து வெளிக் குப்பைகளை கொட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் சொல்கின்றனர். இந்நிலையில், வெள்ளியங்காடு பகுதியில் சாலையில் அமர்ந்து திருப்பூர் தெற்கு திமுக எம்.எல்.ஏ.க.செல்வராஜ் மறியல் போராட்டம் ஈடுபட்ார்.
அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அள்ளும் வரை தண்ணீர் கூட பருக மாட்டேன் திமுக எம்.எல்.ஏ. செல்வராஜ் தெரிவித்தார். மேலும், நாளை வேறு ஒரு வார்டில் போய் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் எம்எவ்ஏ.செல்வராஜ் கூறினார். தர்ணாவில் ஈடுபட்ட அவரிடம் அதிகாரிகள் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

